கனடாவில் எழுத்தாளர் கோவிலூர் செல்வராஜன் நூல்களின் வெளியீட்டு விழா!உலகத் தமிழ் வாசகர்கள் மத்தியில் நன்கு அறியப்பெற்ற ஐரோப்பா வாழ் எழுத்தாளர் கோவிலூர் செல்வராஜன் நூல்களின் வெளியீட்டு விழா ( 25-05-2024 ) அன்று கனடா ஸ்காபுறோ நகரில் நடைபெற்றது.

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவில் மேற்படி விழாவிற்கு தற்போதை தலைவர் எழுத்தாளரும் கவிஞருமான அகணி சுரேஸ் அவர்கள் தலைமை தாங்கினார் . 

27 Case Bridge Court Unit 5 (27 கேஸ்பிரிட்ஜ் கோர்ட் யுனிட்- 5 )என்னும் விலாசத்தில் அமைந்துள்ள ‘பைரவி நுண்கலைக் கூட’ கலாச்சார மண்டபத்தில் மிகவும் சிறப்பாக மண்டபம் நிறைந்த எழுத்தாளர்கள், விருந்தினர்கள், பார்வையாளர்களுடன் இடம்பெற்றிருந்தது.

கோவிலூர் செல்வராஜன் (Koviloor Selvarajan) ஒரு ஈழத்து பாடகர், நடிகர், கவிஞர் மற்றும் பத்திரிகை ஆசிரியர். இவரது இயற்பெயர் செல்வராஜன் ராசையா. இவரது முதலாவது சிறுகதை விடியாத இரவுகள்.

இவர் இலங்கை வானொலியில் பல நாடகங்களில் பங்கேற்று நடித்துள்ளார். வானொலிப் பாடகராக இருந்ததோடு, இசையமைப்பாளராகவும் திகழ்ந்தார். இலங்கை வானொலியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும், அறிவிப்பாளராகவும் விளங்கியவர்..

தினகரன் பத்திரிகையில் இவரது படகுத்துறை – 1975, லாவண்யா ஒரு முற்றுப்புள்ளி – 1978, 
இளமைக் கோவில் ஒன்று – 1977 
ஆகிய நாடகங்களை எழுதினார்.

சிந்தாமணி, வீரகேசரி, லண்டன் - மேகம், நோர்வே – பறை, பாரிஸ் - ஈழநாடு, ஈழமுரசு ஆகிய பத்திரிகைகளில் இவரது சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன.புதியது பழையவை