கிராம சேவையாளர் தரம் 3 இற்கான புதிய ஆட்சேர்ப்பு பட்டியல் வெளியானது!கிராம சேவையாளர் தரம் 3 இற்கான புதிய ஆட்சேர்ப்பு பட்டியல் இன்று (07-05-2024) வெளியாகியுள்ளது.


உள்நாட்டலுவல்கள் அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது

www.moha.gov.lk எனும் இணையதளத்தில் பெயர் விபரங்களை சரிபார்க்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தகுதியுடைய ஆயிரத்து 942 பேரின் பெயர்பட்டியல் வெளியாகியுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அஷோக பிரியந்த தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், கிராம உத்தியோகத்தர்களுக்கான புதிய நியனப்பட்டியலில் பெயரிடப்பட்டுள்ளவர்களுக்கு எதிர்வரும் 8 ஆம் திகதி நியமனம் வழங்கப்படவுள்ளது.

அன்றைய தினம் காலை 10.30 க்கு அலரிமாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

கிராம உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்வதற்கான பரீட்சை கடந்த ஆண்டு டிசம்பம் மாதம் 2 ஆம் திகதி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை