தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் ஸ்ரீ சபாரத்தினத்தின் 38 ஆவது நினைவு தினம்
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் ஸ்ரீ சபாரத்தினத்தின் 38 ஆவது நினைவு தினம் யாழில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

குறித்த நினைவஞ்சலி நிகழ்வானது யாழ்.கொக்குவில் பகுதியில் ஸ்ரீ சபாரத்தினம் கொலை செய்யப்பட்ட இடத்தில் இடம்பெற்றுள்ளது.


இதன்போது மறைந்த தலைவரின் திருவுருவப்படத்திற்கு பொதுச்சுடர் ஏற்றி மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.


இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தம் கருணாகரம், ரெலோ இயக்கத்தின் உறுப்பினர்களான விந்தன் கனகரத்தினம் தியாகராஜ நிரோஷ் துரைராஜா ஈசன் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
புதியது பழையவை