நேபாளத்தில் நடைபெறும் கபடி போட்டியில் இலங்கை தேசிய அணியில் - மட்டக்களப்பை சேர்ந்த 3 வீராங்கனைகள்நேபாளத்தில் நடைபெறும் கபடி போட்டியில் இலங்கை தேசிய அணியில் மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தை சேர்ந்த 3 வீராங்கனைகள் தெரிவாகியுள்ளனர்.

எதிர்வரும் நாட்களில் நேபாளத்தில் நடைபெறவுள்ள கபடி போட்டியில் விளையாடுவதற்கு
இலங்கை தேசிய கபடி அணித் தெரிவில் மட்டக்களப்பு கிரான் மற்றும் கோரகல்லிமடுவை சேர்ந்தவர்கள் தெரிவாகியுள்ளனர்.

இதில் கோரகல்லிமடு கணேஷ் விளையாட்டுக் கழக கபடி அணி வீராங்கனையும், மட்/ககு/கோரகல்லிமடு ஸ்ரீ ரமண மகரிஷி வித்தியாலைய உடற்கல்வி ஆசிரியருமான கோகலிகா அவர்களும் கிரானை சேர்ந்த மட்/ககு/ கிரான் மத்திய கல்லூரியின் பழைய மாணவிகளும் , கிரான் கருணா ஐக்கிய விளையாட்டு கழக வீராங்கனைகளுமான R.கஜேந்தினி மற்றும் S.சிந்துஜா ஆகியோரும் தெரிவாகி நமது மட்டக்களப்பு மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.


புதியது பழையவை