மக்கள் வங்கிக்கு அனுப்பிய பணம் மாயம் - நாட்டுக்கு வந்த பெண் திகைப்பு!




வெளிநாட்டில் வீட்டுபணிப்பெணாக வேலை செய்து வந்த பணத்தை நாட்டிலுள்ள அரசங்கிக்கு அனுப்பி வந்த பெண், நாடு திரும்பிய நிலையில் பணம் எடுக்க வங்கிக்கு சென்றபோது தனது வங்கிக்கணக்கில் பணம் இல்லை என்பதை அறித்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

பக்வந்தலாவ ,எல்பொட வத்தபகள பிரதேசத்தைச் சேர்ந்த நித்யஜோதி என்ற பெண்ணின் பணமே இவ்வாறு மாயமான நிலையில் அது தொடர்பில் அவர் ஹட்டன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,


குடும்ப வறுமையை போக்க குவைத் சென்ற பெண்
குவைத்தில் இரண்டு வருடங்கள் வீட்டுப் பணிப் பெண்ணாகப் பணிபுரிந்து வந்த பாதிக்ல்கப்பட்ட பெண் , தனது மாதாந்த சம்பளத்தை ஹட்டன் மக்கள் வங்கியில் ஆரம்பிக்கப்பட்ட தனது கணக்கில் வரவு வைத்துள்ளார்.



எனினும் அவர் இலங்கைக்கு வந்து குறித்த பணத்தின் ஒரு பகுதியை வங்கி பெற்றுக் கொள்வதற்காக சென்ற போது, ​​கணக்கில் மீதி 1046 ரூபா மாத்திரமே இருந்ததாக கூறியுள்ளனர்.


(17-05-2022) அன்று குவைத் நாட்டில் வீட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைக்குச் சென்றதாக பெண் கூறியுள்ளார்.

குடும்பத்தின் பொருளாதாரச் சிரமங்களையும், தான் வசிக்கும் வீட்டையும் சீர்செய்யும் நோக்கில், வேலையில் இணைந்தது அன்றைய தினத்திலிருந்து பெற்ற மாதச் சம்பளத்தையும் உள்ளூர் வங்கியின் ஊடாக ஹட்டன் மக்கள் வங்கியில் உள்ள அவரது கணக்கில் வரவு வைக்கப்பட்டது , என அவர் கூறியுள்ளார் .


அவ்வாறு வரவு வைக்கப்பட்ட தொகை ரூ.13,44859/= (பதின்மூன்று இலட்சத்து நாற்பத்து நாலாயிரத்து எண்ணூற்று ஐம்பத்தி ஒன்பது) எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் கஸ்ரப்பட்டு சேர்ந்த பணத்திற்கு என்ன நடந்தது என தெரியாத நிலையில், பெண் மிகவும் கவலையில் ஆழ்ந்துள்ளார்.
புதியது பழையவை