கடும் சர்ச்சையில் சிக்கிய பிரபல யூடியூபர்
இந்தியாவில் பிரபல யூடியூபரான இர்பான் 'இர்பான் வியூஸ்' எனும் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார்.

உணவகங்களில் உள்ள உணவுகளை ரிவிவ் செய்வதன் மூலம் பிரபலமான இவர் திரைப்பிரபலங்களுடனும் நேர்காணல்களும் எடுத்து வருகிறார்.

கடந்த ஆண்டு யூடியூபர் இர்பானுக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு தன்னுடைய மனைவி மற்றும் குடும்பத்தோடு சேர்ந்து சமையல் வீடியோக்களை அவர் வெளியிட்டு வருகிறார்.தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருக்கும் செய்தியை அவர் தன்னுடைய ரசிகர்களிடமும் பகிர்ந்து கொண்டார். இந்நிலையில் யூடியூபர் இர்பான் தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்துள்ளார்.


இந்த சம்பவம் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனையடுத்து வெளிநாட்டில் பரிசோதனை செய்து, தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை அறிவித்த யூடியூபர் இர்பான் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது.

அதோடு காவல்துறையிலும் இர்பான் மீது சுகாதாரத்துறை புகார் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதியது பழையவை