இலங்கையில் இன்று (03-05-2024) நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலை குறைக்கப்படுவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் அறிவித்துள்ளார்.
கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் சற்றுமுன் அவர் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
புதிய விலை நிலவரம்
சர்வதேச நாணய நிதியத்தின் பகுப்பாய்வு முடிவுகளுக்காக காத்திருக்கும் அரசாங்கம்
சர்வதேச நாணய நிதியத்தின் பகுப்பாய்வு முடிவுகளுக்காக காத்திருக்கும் அரசாங்கம்
அதன்படி, தற்போது 4,115 ரூபாவாக விற்பனை செய்யப்படும் 12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3,940 ரூபாவாகும்.
அத்துடன் 5 கிலோகிராம் நிறைகொண்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டருக்கு ரூ.70 குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை ரூ.1,582 ஆக உள்ளது.
மேலும் 2.3 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சிலிண்டரின் விலை ரூ.32 குறைக்கப்பட்டு அதன் புதிய விலை ரூ.740 என அறிவிக்கப்பட்டுள்ளது.