மட்டக்களப்பில் ஆலயங்களில் திருடிய இருவர் கைது!மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி டச்பார், மஞ்சம்தொடுவாய் பிரதேசத்திலுள்ள இரு ஆலையங்களில் திருடிவந்த இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

26 வயதுடைய இரு சந்தேகநபர்களே நேற்றையதினம் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டச்பார் வீதியிலுள்ள சிந்தாமணி பிள்ளார் ஆலையம் மற்றும் மஞ்சம் தொடுவாயிலுள்ள வீரபத்திரர் ஆலையத்திலுள்ள செம்பிலான குத்துவிளக்குகள் மற்றும் மின்சாரசபையின் ரான்போமர்களிலுள்ள செம்பு கம்பிகள் அண்மை காலமாக திருட்டுப்போயுள்ளமை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.


இந்நிலையில் கல்லடி தரிசணம் வீதி நொச்சிமுனையை சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் ஒருவரையும் மட்டு நகர் மத்தியஸ்தர் வீதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டதுடன் திருடப்பட்ட பொருட்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.


இதில் கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதியது பழையவை