பாரிய மரமொன்று வீழ்ந்ததில் இரு பொலிஸாருக்கு காயம்பொலிஸார் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மரமொன்று சரிந்து வீழ்ந்ததில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளதாக கவரக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

தம்புள்ள பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் மேலும் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் மூன்று மோட்டார் சைக்கிள்களில் மாத்தளையில் இருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்து கொண்டிருக்கும் போது கவரக்குளம் பிரதேசத்தில் வைத்து பாரிய மரமொன்று ஒரு பொலிஸ் மோட்டார் சைக்கிள் மீது சரிந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.

புதியது பழையவை