இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டம் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.
வவுனியா இரண்டாம் குறுக்குதெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (19-05-2024) காலை 10 மணியளவில் குறித்த கூட்டம் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன ,எம்.ஏ.சுமந்திரன், செயலாளர் ப.சத்தியலிங்கம், சட்டத்தரணி கே.வி. தவராசா , கே.சிவஞானம் உட்பட மத்திய குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
தமிழ் பொதுவேட்பாளர்
இன்றையகூட்டத்தில் தமிழரசுக்கடசியின் தலைமை விடயத்தில் நீதிமன்றில் தாக்கல்செய்துள்ள வழக்குதொடர்பாக முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் தமிழ் பொதுவேட்பாளர் விடயம் தொடர்பாகவும் முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.