மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!மீள் அறிவித்தல் விடுக்கப்படும் வரை சிறிய படகுகள் மீன்பிடியில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு கடற்றொழில் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

கடலில் ஏற்படும் காலநிலை மாற்றங்களைக் கருத்திற்கொண்டு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது . 

இதன்படி, அடுத்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் பல மாகாணங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கிடையில், எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குப் பிறகு மழையுடனான வானிலை  குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதியது பழையவை