மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு!



பசறை - லுணுகலை பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (19-05-2024) காலை இடம்பெற்றுள்ளது.

வழிபாட்டுத்தலமொன்றில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போதே மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபர்
சம்பவத்தில் லுணுகலை - கீனகொட பகுதியைச் சேர்ந்த 76 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக லுணுகலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை