கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டடத்தில் தீப்பரவல்கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்த அதிவேக நெடுஞ்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் தீ பரவியுள்ளது.


தீயணைப்பு

சம்பவ இடத்திற்கு 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், விசாரணைகள் நடாத்தப்பட்டு வருகின்றன.
புதியது பழையவை