ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணிமனை இலங்கை குறித்து அறிக்கைஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் பணிமனை இலங்கை தொடர்பில் வெளியிட்ட அறிக்கை குறைபாடுடையது என மனித உரிமைகள் பேரவைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி ஹிமாலி அருணதிலக தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க்கின் அறிக்கை தொடர்பில் அவருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


மேலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணை எதுவும் இல்லாத நிலையில் ஆணையாளர் இலங்கை குறித்து அறிக்கை
வெளியிட்டுள்ளமை தேவையற்ற ஒரு தலைப்பட்சமான முயற்சி.

இலங்கையின் நிலைப்பாட்டை கருத்தில் கொள்ளாமல் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை இது.
இந்த அறிக்கையை மனித உரிமைகள் ஆணையாளர் பணிமனை வெளியிட்டமைக்கான நோக்கம் என்ன? – என அவர் கேள்வி எழுப்பினார்.

இலங்கை அரசாங்கம் நல்லிணக்கத்துக்கான தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ள தருணத்தில் இந்த அறிக்கை பக்கச்சார்பாக – அரசியல் மயப்படுத்
தப்பட்டதாக – சுயமாக உருவாக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதியது பழையவை