ஊழியர் சேமலாப நிதியை செலுத்தத் தவறிய 15, 000 வழக்குகள் தொடர்பில் அறிவிப்பு!ஊழியர் சேமலாப நிதியை செலுத்தத் தவறிய நிறுவனங்களுக்கு எதிராக சுமார் 15, 000 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக அரசாங்கப் பொதுக்கணக்குகளுக்கான குழு வெளிப்படுத்தியுள்ளது.


கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான தொழிலாளர் திணைக்களத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்காக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பொதுக்கணக்குகளுக்கான குழுவின் கூட்டத்தின் போது இந்த தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் 31, டிசம்பர் 2021இல் 5,000 வழக்குகள் முன்னெடுக்கப்பட முடியாத தேக்க நிலைமைக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பதிவு செய்யப்பட்ட முகவரிகளில் நிறுவனங்கள் செயல்படாமை அல்லது நிறுவனங்கள் பணிப்பாளர்கள் அல்லது உரிமையாளர்கள் வெளிநாடுகளில் இருக்கின்றமை, நிறுவனங்கள் முழுமையாக நாட்டைவிட்டு வெளியேறுதல் போன்ற காரணிகள் வழக்குகள் தேக்கமடைவதற்கு காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை