2004 ல் விடுதலைப்புலிகளை இரண்டாக பிரித்த பெருமைக்குரியவர்கள் 2024, ல் யாரை பிரிப்பார்களோ…!எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தானும் தனது கட்சியும் ஆதரவளிக்கவுள்ளதாக கருணா அம்மான் என அழைக்கப்படும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

பாணந்துறையில் நேற்று புதன்கிழமை (19-06-2024) ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.


இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்...

” ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நாம் பாராட்ட வேண்டும், ஏனென்றால் அவர் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பினார்.
எல்லோருக்கும் வரலாறு தெரியும். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முழு நாட்டையுடம் , வணிகங்களையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் கூட சீரழித்தார்.


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னரே நாட்டில் நிலைமை சீரடைந்துள்ளது.

அதனால்தான் நானும் அவரை ஆதரிக்கிறேன். அடுத்த வாய்ப்பையும் நாம் அவருக்குக் கொடுக்க வேண்டும்” என கூறியுள்ளார்.


குறிப்பாக வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்கப் போவதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

2004, ல் விடுதலைப்புலிகளில் இருந்து கருணாவை ஏறாவூர் மௌலான மூலமாக பிரித்தவர் 2024, ல் கூடவே உள்ளார் யாருக்கு ஆப்போ ..?
புதியது பழையவை