ஹஜ் புனித யாத்திரை சென்ற 645 பேர் உயிரிழப்பு!சவுதி அரேபியாவில் நிலவி வரும் கடும் வெப்ப அலையால் ஹஜ் புனித பயணம் மேற்கொண்டவர்களில் 645 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தூதுவர் தெரிவித்துள்ளார்.

மேலும், உயிரிழந்தவர்களில் 323 பேர் எகிப்தியர்கள், 60 பேர் ஜோர்டானியர்கள், 68 பேர் இந்தியர்கள் என்றும் மெக்காவில் கடும் வெப்ப அலை வீசி வருவதால் உயிரிழப்புகள் அதிகரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


ஹஜ் பயணம் 
முஸ்லிம்களின் 5 கடமைகளில் ஒன்று சவூதி அரேபியாவில் உள்ள புனித மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்வது ஆகும்.

ஆண்டுதோறும் வெளிநாடுகளில் இருந்து இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் மெக்கா, மதீனாவுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ,  இந்த ஆண்டும் யாத்ரீகர்கள் வருகையால் மெக்கா நகரம் நிரம்பி வழிவதோடு, வரும் நாட்களில் மேலும் பலர் ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
புதியது பழையவை