டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!



நாட்டில்  டெங்கு நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சமூக சுகாதார நிபுணர், வைத்தியர் லஹிரு கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.


இவ்வாண்டு பதிவான டெங்கு நோயாளர்களில் 37 வீதமானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இதுவரையான காலப்பகுதிக்குள் 26,803 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொசன் பௌர்னமி தினத்தின் பின்னர் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் 161 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் டெங்கு நோயினால் 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை