பொது வேட்பாளர் என்ற நிலைப்பாட்டில் தமிழர்களுக்கு ஒற்றுமையும் திறனும் இல்லை



இலங்கையில் இந்த வருட இறுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான ஒற்றுமையும், திறனும், பின்னணியும் தமிழ் மக்களிடம் இல்லை என இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரனை யாழ்ப்பாணத்தில் வைத்து சந்தித்தபோதே ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், வடக்கு கிழக்கின் பொருளாதாரத்தை உயர்த்துவதே தனது நோக்கம் என விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.



இந்நிலையில், ரணில் விக்ரமசிங்க, எல்லாவற்றையும் ஒரு பொருளாதாரக் கண்ணோட்டத்தில் பார்ப்பதாக விக்னேஸ்வரன், ரணிலுடனான சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை, ஜனாதிபதி தேர்தலுக்கான பொதுவேட்பாளர் என்ற விடயம் முன்வைக்கப்பட்டுள்ளபோதும் இன்னும் அதில் தமிழ்க் கட்சிகள் மத்தியில் உடன்பாடுகள் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை