உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விவகாரம் - நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!உள்ளுராட்சி சபை தேர்தலை நடத்தாததன் மூலம் பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளமை தொடர்பான வழக்கின்  தீர்ப்பு அறிவிப்வை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் 9 ஆம் திகதி நடைபெற இருந்த உள்ளுராட்சி சபை தேர்தலை நடத்தாததன் மூலம் பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தொடரப்பட்ட மனு மீதான விசாரணையை முடித்து வைத்தே இந்த உத்தரவிட்டுள்ளது.

மனு மீதான விசாரணை 
இந்த மனு மீதான விசாரணை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் நேற்று (06-06-2024) நடைபெற்றது.


இந்நிலையில், மனுக்கள் தொடர்பான வாய்மொழி பரிந்துரைகள் வழங்கல் நேற்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் மற்றும் பெஃப்ரல் அமைப்பு ஆகியன இந்த மனுவை சமர்ப்பித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை