யாழில் இன்று அதிகாலை இடம்பெற்ற பயங்கரம்யாழ்ப்பாணம் – வடமராட்சி, உடுப்பிட்டி பகுதியில் கொள்ளையர்களால் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்ட நபரொருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இக் கொடூர சம்பவம் இன்று(01-06-2024) அதிகாலை இடம்பெற்றுள்ளதக தெரியவருகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த நபர் வியாபாரம் முடித்துவிட்டு அதிகாலையில் தனது வீட்டிற்கு சென்றபோது, அங்கு பதுங்கியிருந்த கொள்ளையர்கள் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.


பதுங்கியிருந்த கொள்ளையர்கள்
இதன்போது அவரால் அவலக்குரல் எழுப்பப்பட்ட நிலையில், அவரது மனைவி கணவரின் சத்தம் கேட்டு வீட்டிற்கு வெளியே ஓடி வந்துள்ளார். அவரது மனைவியையும் தாக்கிய கொள்ளைக் கும்பல் அவரிடம் இருந்த நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

வீட்டில் சத்தம் கேட்பதை அவதானித்த அயலவர்கள், அங்கு சென்று கூரிய ஆயுதத்தால் படுகாயமடைந்த நபரை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். அவர் தற்போது அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.


சம்பவத்தில் உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த 42 வயதுடைய குணசிங்கம் சந்துரு எனும் நபரே படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை