சுற்றுலா வந்த பெண்ணின் பயணப் பொதியை திருடியவர் கைது!



இலங்கைக்கு சுற்றுலா வந்த இங்கிலாந்துப் பெண்ணின் பயணப் பொதி பேருந்தொன்றில் வைத்து திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் களனி பெத்தியகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குறித்த பயணப் பொதியிலிருந்த 20 ஆயிரம் டொலர்கள் பெறுமதியான மடிக்கணினி, கமரா, வங்கி அட்டைகள் மற்றும் விமான கடவுச்சீட்டு உள்ளிட்ட பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராக்களில் பதிவாகிய புகைப்படங்கள் மூலம் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டதையடுத்து, அவரை கைது செய்ய முடிந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதியது பழையவை