சட்டவிரோத மாடு கடத்தல் – பொலிஸ் அதிகாாிக்கு பொன்னாடை போா்த்தி கௌரவிப்பு!வவுனியாவில் சட்டவிரோத மாடு கடத்தல் சம்பவத்தினை முறியடித்த ஓமந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயதிலக்கவிற்கு சிவசேனை அமைப்பினா் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.

வடக்கில் இருந்து புத்தளம் நோக்கி கடத்தப்பட்ட 70 ஆடுகள் மற்றும் 18 மாடுகள் ஓமந்தை பொலிசாரால் மீட்கப்பட்டதுடன், நான்கு பேரை கைது செய்யப்பட்டமையைப் பாராட்டும் முகமாகவே குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தது.


இதேவேளை அண்மைக்காலமாக இறைச்சிக்காக மாடு, ஆடுகள் என்பன சட்ட விரோதமாக கடத்தப்படும் செயற்பாடுகள் இடம்பெற்று வரும் நிலையில் ஓமந்தை பொலிஸாரால் குறித்த கடத்தல் முறியடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது சிவசேனை அமைப்பின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் அ.அ.மாதவன் மற்றும் சிவசேனை அமைப்பின் முக்கியஸ்தர்கள் பலா் கலந்து கொண்டிருந்தனர்.
புதியது பழையவை