ஜனநாயகத் தேசியக் கூட்டணியின் தீர்மானமிக்க கலந்துரையாடல்!தமிழ் பொதுவேட்பாளரைக்  களமிறக்குவது தொடர்பான ஜனநாயக தேசியக் கூட்டணியின் தீர்மானமிக்க கலந்துரையாடல் இன்று வவுனியா, கோவிற்புளியங்குளத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெறவுள்ளது.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் இந்த நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் டெலோ இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலாதன், புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இக் கூட்டத்தின்போது ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரைக்  களமிறக்குவது தொடர்பாக ஜனநாயக தேசியக் கூட்டணியாக இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுவேட்பாளர் தொடர்பாக முன்னதாக சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளுடன் தனித்தனியாக கலந்துரையாடியிருந்தன.


இதனையடுத்து கட்சிகளின் உயர்மட்டக் குழுவினருடன் ஆராய்ந்து பதிலளிப்பதாக குறித்த கட்சிகள் அறிவித்திருந்தன.இந்த நிலையிலேயே இன்று இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதியது பழையவை