பொசன் பண்டிகையை முன்னிட்டு - மூன்று கல்வி வலயங்களின் பாடசாலைகளுக்கு விடுமுறை



பொசன் பண்டிகையை முன்னிட்டு அனுராதபுரம், மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள பதினொரு பாடசாலைகளை எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை மூடுவதற்கு வடமத்திய மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அனுராதபுரம் நடுநிலைப் பாடசாலை, ஸ்வர்ணபாலி தேசிய பாடசாலை, வலிசிங்க ஹரிச்சந்திர மகா வித்தியாலயம், நிவட்டகச்சேதிய தேசிய பாடசாலை, ஸாஹிரா தேசிய பாடசாலை, விவேகானந்தா மகா வித்தியாலயம், தேவானம்பியதிஸ்ஸ புர மகா வித்தியாலயம், மகாபோதி வித்தியாலயம், மிஹிந்தலை மகா வித்தியாலயம், மிஹிந்தலை கம்மலக்குளம் வித்தியாலயம் மற்றும் தந்திரிமலை வித்தியாலயம் என்பவற்றுக்கே இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.


விசேட பாதுகாப்பு கடமைகளுக்காக வெளிமாவட்டங்களில் இருந்து வரும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தங்குமிட வசதி வழங்குவதற்காக பாடசாலையை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது.


மேலும், வாக்குறுதியளிக்கப்பட்ட சம்பளத்தை வழங்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று மேற்கொள்ளப்படவுள்ள ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கையானது பாடசாலை நேரத்திற்கு பின்னர் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆசிரியர் சங்கத்தின் (CTU) பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் கூறுகையில், அனைத்து பாடசாலை நடவடிக்கைகளும் 1 மணிக்கு நிறுத்தப்படும்.


பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட சம்பள அதிகரிப்பில் எஞ்சிய மூன்றில் இரண்டு பங்கினை வழங்குமாறு கோரி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.

கல்வி அமைச்சு எமக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை வழங்க வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கான கொடுப்பனவாக 46 பில்லியன் நிதி, இந்த ஆண்டு நிதி ஒதுக்கப்பட வேண்டும்.

கூடுதலாக, பரீட்சை திருத்த கட்டணங்களை அதிகரிக்க அழைப்பு விடுத்துள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காண கடந்த ஆண்டு குழுவொன்று நியமிக்கப்பட்ட போதிலும் கட்டணங்கள் அதிகரிக்கப்படவில்லை” என்றார்
புதியது பழையவை