சஜீத்துக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை!



எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின்சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாசவிற்கு எதிராக லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக் குழுவில் செய்யப்பட்ட முறைப்பாடு ஒன்றின் அடிப்படையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக் குழுவினால் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்ட இந்த விசாரணைகளுக்கு தேவையான தகவல்களை வழங்குமாறு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் சஜித் பிரேமதாசர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கும் நிலையில் சபாநாயகருக்கு சமர்ப்பித்த சொத்து விபரங்களின் உறுதிப்படுத்தப்பட்ட ஆவணம் ஒன்றை வழங்குமாறு சபாநாயகரிடம் கோரப்பட்டுள்ளது.

சஜீத் பிரமதாசா 2000 ஆம் ஆண்டில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்ரத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். 2001 ஆம் ஆண்டில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அமைச்சரவையில் சுகாதாரத் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2011 இல் ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவரானார். 2015 இல் மைத்திரிபால சிறிசேனவின் அமைச்சரவையில் வீடமைப்பு, சமுர்த்தி அமைச்சராக நியமிக்கப்பட்டார். 

2019 நவம்பரில் நடைபெற்ற அரசுத்தலைவர் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிட்டு 41.99% வாக்குகள் பெற்று இலங்கை பொதுசன முன்னணி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவிடம் தோற்றார். இதனை அடுத்து 2019 திசம்பரில் எதிர்க்கட்சித் தலைவராக ஐக்கிய தேசியக் கட்சியினால் நியமிக்கப்பட்டார்.பின் 2020 நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டு மீண்டும் எதிர்க்கட்சி தலைவர் ஆனார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பிரதான வேட்பாளர் ஒருவராக இவரும் போட்டியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை