மட்டக்களப்பு சின்ன ஊறணி இந்து மயானத்தில் நிலவிய குறைபாடுகளுக்குத்தீர்வு!மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சின்ன ஊறணி கிராம சேவையாளர் பிரிவில் உள்ள இந்து மயானத்தில் மழைக்காலங்களில்
ஈமைக்கிரியைகளை மேற்கொள்வதில், மக்கள் சந்தித்து வந்த பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது. 

மயானத்தின் ஒரு பகுதி, மண் இட்டு, மேடாக்கப்படவுள்ளது.


சின்ன ஊறணி கிராம சேவையாளர் பிரிவு கிராம அபிவிருத்தி சங்கம் , பொது அமைப்புக்கள் ,கிராம மக்கள் ஒன்றிணைந்து நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரத்திடம், விடுத்த கோரிக்கைக்கமைய அவர், மயான புனரமைப்பிற்காக 5 இலட்சம் ரூபா நிதியை ஒதுக்கியிருந்தார்.இந் நிதி மூலம், மயானத்தில் புனரமைப்புப் பணிகள் இடம்பெறவுள்ளன.
இதற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது. அடிக்கல் நாட்டும் நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், மாநகர ஆணையாளர் சிவலிங்கம், முன்னாள் மாநகர பிரதி முதல்வர் கந்தசாமி சத்தியசீலன்
உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
புதியது பழையவை