வவுனியாவில் நில அதிர்வு!வவுனியாவின் சில இடங்களில் சிறிய அளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளது.

வவுனியாவில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் மதவாச்சி, கெப்பத்திகொல்லாவ ஆகிய பகுதிகளை அண்மித்து இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

நேற்றிரவு(18-06-2024) 11 மணியளவில் 2.3 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு உணரப்பட்டதாக புவிசரிதவியல், நில அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இதனால் சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புதியது பழையவை