உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட தேரர் கைது!பலாங்கொட கஸ்ஸப தேரர்  தலங்கம காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கைது சம்பவம் இன்று (06-06-2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

உண்ணாவிரதப் போராட்டம்

உத்தேச மின்சாரக் கட்டணத்திற்கு எதிராக எதிர்ப்புப் பலகையை ஏந்தியவாறு நாடாளுமன்றத்திற்கு அருகில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


உண்ணாவிரதத்தை ஆரம்பித்து சுமார் 10 நிமிடங்களில் தலங்கம காவல்துறை அதிகாரிகள் வந்து அவரை கைது செய்துள்ளனர்.
புதியது பழையவை