அம்பாறை மேலதிக அரசாங்க அதிபராக சி.ஜெகராஜன் நியமனம்
அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக இலங்கை நிர்வாக சேவை தரம் 1 அதிகாரியான காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.


பொதுச்சேவை ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைவாக பொது நிர்வாக அமைச்சு இந்நியமனத்தை வழங்கியுள்ளது.2007 இல் இலங்கை நிர்வாகசேவையில் இணைந்து கொண்ட காரைதீவைச் சிவ.ஜெகராஜன், காரைதீவு பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராகவும் பிரதேச செயலாளராகவும் கடமையாற்றி வந்த வேளையிலே கல்முனை வடக்கு பிரதேச செயலாளாரகவும் கடமையாற்றி இருந்தார். 2013 இல் திருக்கோவில் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டு அங்கு சிறப்பான பணியாற்றி வந்த வேளையில் 2019 மீண்டும் காரைதீவுக்கு
நியமிக்கப்பட்டார்.


ஐந்து வருட கால சேவையை பூர்த்தி செய்து தற்பொழுது அவர் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக
நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய, வேதநாயகம் ஜெகதீசன் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் மேலதிக
செயலாளராக பதவி உயர்வு பெற்று செல்கின்றார்.
புதியது பழையவை