மட்டக்களப்பில் கோர விபத்து - குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு!மட்டக்களப்பில்  இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், மோட்டார் சைக்கிள் மற்றும் வான் நேருக்கு நேர் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த சம்பவமானது நேற்று சனிக்கிழமை (29-06-2024) கரடியனாறு காவல் பிரிவுக்குட்பட்ட உறுகாமம் பதுளை வீதியில் இடம்பெற்றுள்ளது.


மேற்படி, விபத்தில் செங்கலடி சேனைக்குடியிருப்பை சேர்ந்த 35 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான ஒருவரே உயிரிழந்துள்ளார் .


தொழில் நிமிர்த்தம் பெரிய புல்லுமலை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த வான் பாதை மாறி குறித்த நபர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், வானின் சாரதியின் தூக்கமே விபத்துக்கான காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த விபத்து தொடர்பில் கரடியனாறு காவல்துறையினர் வானின் சாரதியை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை