நாளை மூடப்படும் கொழும்பு - கண்டி வீதியின் ஒரு பகுதி கொழும்பு - கண்டி வீதியின் கீழ் கடுகண்ணாவை பகுதி நாளை (08-06-2024) சனிக்கிழமை மூடப்படவுள்ளதாக கேகாலை மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய காலை 10.30 முதல் மாலை 6.30 மணி வரையான காலப்பகுதியில் அவ்வப்போது மூடப்படும் எனவும் கேகாலை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்த பகுதியில் உள்ள ஆபத்தான பாறைகள் மற்றும் மரக்கிளைகளை அகற்றுவதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வாகனத்தை செலுத்தும் சாரதிகள் மிகுந்த கவனத்துடன் செல்லுமாறும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை