பறவைக் காய்ச்சலால் உலகில் பதிவான முதல் மனித உயிரிழப்பு!



மெக்சிகோவில்  உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் பறவைக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஏப்ரல் மாதம் குறித்த நபர் உயிரிழந்துள்ளதோடு அவர் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) தெரிவித்துள்ளது.

இதன்படி, பறவைக் காய்ச்சலால் உலகில் பதிவான முதல் மனித மரணம் இதுவாகும்.

59 வயதான இந்த நபருக்கு எவ்வாறு வைரஸ் தொற்று ஏற்பட்டது என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

இதனைத் தொடர்ந்து மெக்ஸிகோவின் ஏனைய மாநிலங்களிலும் பறவைக் காய்ச்சல் பரவல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை