பிரதமர் பதவியில் இருந்து நரேந்திர மோடி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி தனிப் பெரும்பான்மை பெறாத நிலையில், மோடி பதவியில் இருந்து விலகுவதே சரியென்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் பலம் இழந்த நிலையில் மீண்டும் ஆட்சியமைக்கும் பாஜக
இந்தியாவில் பலம் இழந்த நிலையில் மீண்டும் ஆட்சியமைக்கும் பாஜக
பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலை
நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 243 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 98 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
பெரும்பான்மை பெற 273 இடங்கள் தேவைப்படும் நிலையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையிலேயே இந்திய பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக 400 இடங்களை வெல்லும் என்று பிரசாரம் செய்த நிலையில் 300 இடங்களை கூட பாஜகவால் வெல்லமுடியவில்லை என்று இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.