தமிழர்கள் அடக்கப்பட்டால் ஏனைய இனங்களும் நிம்மதியாக வாழ முடியாது - சிறீதரன் எம்பிதேசிய இனமான தமிழினம் அச்சுறுத்தப்பட்டு எப்பொழுதும் நிலம் பறிக்கப்பட்டு இராணுவ பிடிக்குள் வைக்கப்பட்டு அடக்கப்படுகின்ற போது அவர்களுடைய நிம்மதியற்ற வாழ்வு என்பது ஏனைய இனத்தையும் இந்த மண்ணிலே நிம்மதியாக வாழ விடாது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை இன்றைய தினம்(04-06-2024) நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், காணிகளை பறித்தல், தமிழர்களை கைது செய்தலூடாக அச்சுறுத்துதல் அங்கே வாழுகின்ற மக்களினுடைய எண்ணங்களை சிதைக்கின்ற எண்ணங்களை சிதைக்கின்ற நடவடிக்கைகளில் அரசாங்கம் ஒரு மறைமுக நிகழ்ச்சி நிரல்களை வைத்திருப்பதை தான் எங்களால் பார்க்க முடிகின்றது.

இந்த மோசமான நிலமைகள் மாற்றப்பட வேண்டும். நாட்டினுடைய வளர்ச்சியும் முன்னேற்றமும் ஒவ்வொரு தனிமனித செயல்பாடுகளிலும் அடங்கியுள்ளது.
புதியது பழையவை