மர்மமான முறையில் உயிரிழந்துள்ள ஊடகவியலாளர்இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் சிறுவர் நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளராகப் பணியாற்றிய ஊடகவியலாளர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மோதரை பகுதியில் கடற்கரையில் நேற்று (5 ஆம் திகதி) சடலம் கரை ஒதுங்கியுள்ளது.

இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்தவர் பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த இந்துனில் ஜயவர்தன என்ற ஊடகவியலாளர் என மோதரை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


உயிரிழந்தவர் இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமல்போயுள்ளதுடன், இது தொடர்பில் பிலியந்தலை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், சடலம் மோதரை கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த  மரணத்திற்கான காரணம், உயிரிழந்த விதம்தொடர்பில் கண்டறிய பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சடலம் மீதான பிரேத பரிசோதனையின் பின்னர் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என மோதரை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதியது பழையவை