கழுதை பாலில் இருந்து பாலாடைக்கட்டி தயாரிப்பு!



பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடம், விஞ்ஞான பீடம் மற்றும் மருத்துவ பீடம் இணைந்து கழுதைப்பாலில் இருந்து பாலாடைக்கட்டி உள்ளிட்ட சத்தான உணவு மற்றும் தோல் நோய்களுக்கான மருந்துகளை உற்பத்தி செய்யலாம் என ஆராய விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.


இந்த ஆராய்ச்சிக்காக மன்னாரிலிருந்து மூன்று ஆண் கழுதைகள், மூன்று பெண் கழுதைகள் மற்றும் ஒரு கழுதைக் கன்று பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளது.

கழுதைப் பாலில் உள்ள ஊட்டச்சத்து தரம் கிட்டத்தட்ட தாய்ப்பாலில் உள்ளதைப் போன்றது என்றும், அதைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் பாலாடைக்கட்டிக்கு உலகில் அதிக தேவை இருப்பதாகவும் மூத்த பேராசிரியர் டாக்டர் அசோக டங்கொல்லா கூறுகிறார்.

ஆராய்ச்சி வெற்றியடைந்து உற்பத்தி செய்ய முடிந்தால், ஏற்றுமதி செய்வதன் மூலம் அன்னியச் செலாவணியை ஈட்ட வாய்ப்பு உள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.
புதியது பழையவை