தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் விநாயகத்தின் இறுதி வணக்க நிகழ்வு அறிவிப்பு!தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், புலனாய்வுத்துறையின் மேலாளர்களில் ஒருவருமான விநாயகம் என அழைக்கப்படும் கதிர்காமசேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி கடந்த (04-06-2024) ஆம் திகதி பிரான்ஸில் காலமான நிலையில் அவரின் இறுதி நிகழ்வுகள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன்படி இறுதி வணக்க நிகழ்வு மற்றும் நல்லடக்க நிகழ்வுகள் அனைத்தையும் நாளை (20-06-2024) வியாழக்கிழமை அன்று ஐரோப்பிய நேரம் காலை 10h மணிமுதல் L CAST TV TouTube சமூகவலைத்தளம் மற்றும் www.vimeo.com/LCASTTV இணையத்தளம் ஊடாகவும் நேரலையாக காணலாம்.

இறுதி வணக்க நிகழ்வுகள் ஐரோப்பிய நேரம் காலை 10h மணிமுதல் மதியம் 14h மணிவரை நடைபெறும் நல்லடக்க நிகழ்வுகள் ஐரோப்பிய நேரம் மதியம் 15h மணிமுதல் நடைபெறும்.


புதியது பழையவை