உள்ளூராட்சி அதிகார சபைகளில் தற்காலிக ஊழியர்களாக கடமை வகித்தவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (17-07-2024)ஆம் திகதி
மட்டக்களப்பில் இடம் பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி அதிகார சபைகளில் தற்காலிக ஊழியர்களாக கடமை வகித்தவர்களின் நியமனத்தை நிரந்தர நியமனமாக்கும் படி
இராஜாங்க அமைச்சர்களான எஸ்.வியாலேந்திரன் மற்றும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஆகியோரினால் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவிற்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
483 பேருக்கு மட்டக்களப்பில் இன்று(17-07-2024)பி.ப நியமனம் வழங்கப்பட்டது.
மட்டக்களப்பு மாநகர சபை மகா நாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்கள ஆணையாளர் மணிவண்ணன் உட்பட மாகாண உள்ளூராட்சி அதிகார சபைகளின் அதிகாரிகளும் மாவட்டத்தில் உள்ள பிரதேசசபை செயலாளர்களும் கலந்துகொண்டனர்.