93 வாகனங்கள் கறுப்புப் பட்டியலில் இணைப்பு!



சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் புகையுடன் பயணித்த 93 வாகனங்கள் இந்த வருடத்தில் கறுப்புப்பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாக  வாகன உமிழ்வுச் சோதனை அறக்கட்டளை நிதியம் தெரிவித்துள்ளது.

பொதுமக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய குறித்த வாகனங்கள் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் தசன் கமகே தெரிவித்துள்ளார்.


அத்துடன் இந்த வருடத்தில் இதுவரையான காலப் பகுதியில்  517 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன எனவும்  அவற்றில் 93 வாகனங்கள் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன எனவும் அவர்  மேலும் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை