இலங்கை வீரருக்கு கிடைத்த விருது!இலங்கை கிரிக்கட் வீரர் மதீஷ பத்திரணவிற்கு  இந்தியாவில்  பிஹைன்ட்வுட்ஸ் கோல்டன் ஐகொன் விருது வழங்கும் நிகழ்வில் விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கட் வீரர்கள் மற்றும் மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கட் வீரர்களுக்கு ஏற்கனவே இந்த விருது வழங்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், 2024 ஆம் ஆண்டுக்கான பிரபலமான விளையாட்டு நட்சத்திரமாக மதீஷ பத்திரண தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

விளையாட்டு நட்சத்திரம்
இந்திய பிரிமியர் லீக் போட்டித் தொடரில் சென்னை சுபர் கிங்ஸ் அணியின் சார்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மதீஷ பத்திரண விளையாடி வருகின்றார்.


அத்தோடு, பிஹைன்ட்வுட்ஸ் விருது வழங்கும் விழாவில் சினிமா மற்றும் விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளில் பிரகாசித்தவர்களுக்கு விருது வழங்கப்படுகின்றது.

இதனடிப்படையில், இந்த ஆண்டிற்கான பிரபலமான விளையாட்டு நட்சத்திரமாக மதீஷ பத்திரண தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை