தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரான சம்பந்தனின் மறைவுக்கு கிழக்கு ஆளுநர் இரங்கல்இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனின் மறைவிற்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இரங்கல்  செய்தி வெளியிட்டுள்ளார்.

இந்த இரங்கல் செய்தியினை கிழக்கு மாகாண ஆளுநர் தனது முகப்புத்தக பதிவில் குறிப்பிட்டுள்ளார.


இரங்கல் செய்தி

அந்த பதிவில் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளதாவது, “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன் எம்.பி. அவர்களின் மறைவு குறித்து நான் ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்.


இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நீண்டகால நண்பரும், இலங்கையின் எழுச்சியூட்டும் மற்றும் நம்பிக்கைக்குரிய தலைவர்”என பதிவிட்டுள்ளார்.

தமிழ்த் தேசிய அரசியலின் மூத்த உறுப்பினரான சம்பந்தன் உடல் நலக் குறைவு காரணமாக தனது 91வது வயதில் நேற்று இரவு இறைபதம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை