இலங்கை அரசியலுக்கு ஒரு இழப்பு - தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் சம்பந்தனுக்கு இரங்கல் வெளியிட்ட மகிந்தமறைந்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் இரா.சம்பந்தனுக்கு  முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச இரங்கல் வெளியிட்டுள்ளார்.

குறித்த இரங்கல் செய்தியை மகிந்த ராஜபக்ச தனது எக்ஸ் (X)கணக்கில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.


தமிழ்த் தேசிய அரசியலின் மூத்த உறுப்பினர் சம்பந்தன் காலமானார்
தமிழ்த் தேசிய அரசியலின் மூத்த உறுப்பினர் சம்பந்தன் காலமானார்

இலங்கை அரசியலுக்கு இழப்பு
அவர் ஒரு பழைய நண்பர் மற்றும் சக ஊழியர், நாங்கள் பல நாட்கள் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளோம்.


அவரது மறைவு இலங்கை அரசியல் சகோதரத்துவத்திற்கு ஒரு இழப்பு மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இந்த சோக இழப்பை போக்கட்டும்” என தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை