பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் அலுவலகத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்றைய தினம் (15-07-2024) ஆம் திகதி விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் மன்னார் அலுவலகத்திற்கே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விஜயம் செய்து கலந்துரையாடியபோது செல்வம் அடைக்கலநாதன் அவருக்கு பொன்னாடையும் போர்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.