பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு!2023ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களை 2023/2024 கல்வியாண்டுக்கான தேசியப் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கோரியுள்ளது.

இதன்படி, கடந்த வருட உயர்தரப் பெறுபேறுகளின்படி, பல்கலைக்கழக அனுமதிக்கு நிகழ்நிலை (ஒன்லைன்) மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசித் திகதி இன்றுடன் (05-07-2024) முடிவடையவுள்ளது.  


விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தல்
இதற்கமைய, www.ugc.ac.lk எனும் இணையத்தளத்திற்குள் பிரவேசித்து, விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியுமென ஆணைக்குழு கூறியுள்ளது.  

எனவே இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் பல்கலைக்கழக ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நினைவூட்டியுள்ளது.
புதியது பழையவை