ஜூலை 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் பணிக்கு சமூகமளித்த ஆசிரியர்களுக்கு விசேட சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
குறித்த தகவலை அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இவர்களின் பதவி உயர்வுகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் பரிசீலிக்கப்படும் எனவும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பிரகாரம் 3ஆம் தர ஆசிரியர் ஒருவருக்கு 525 ரூபாவும், 2ஆம் தர ஆசிரியருக்கு 1335 ரூபாவும், 1ஆம் தர ஆசிரியருக்கு 1630 ரூபாவும் சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஓய்வூதியத்தைப் பாதிக்காத வகையில் இந்த சம்பள அதிகரிப்புகள் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் வழங்கப்படும் பாராட்டுச் சான்றிதழ்கள் உரிய நாட்களில் கடமைக்கு சமூகமளித்த அரச ஊழியர்களின் தனிப்பட்ட கோப்புகளில் சமர்ப்பிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நிறைவேற்று தரத்திற்கு உள்ளடங்காத அரசாங்க அதிகாரிகளுக்கு விசேட சம்பள உயர்வொன்றை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.