இன்று புதன்கிழமை (10-07-2024) நண்பகல் 12 மணிக்கு முன்னர் கடமைக்கு சமூகமளிக்கத் தவறும் அனைத்து ரயில் நிலைய அதிபர்களும் கட்டுப்பாட்டாளர்களும் சேவையில் இருந்து விலகியவர்களாக கருதப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் எஸ்.எஸ்.முதலிகே வெளியிட்டுள்ளார்.
ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் ரயில் கட்டுப்பாட்டாளர்களால் இன்று புதன்கிழமை வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதை ஒட்டி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.