சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை




அனைத்து தொலைபேசி நிறுவனங்களும் இலவச டேட்டா வழங்குவதாக கூறும் குறுஞ்செய்திகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த குறுஞ்செய்திகளை அணுகுவதன் மூலம் சமூக ஊடக கணக்குகள் மற்றும் கையடக்கத் தொலைபேசி தரவுகளை பிற தரப்பினருக்கு அனுப்ப முடியும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் மேனகா பத்திரன தெரிவித்துள்ளார்.

குறுஞ்செய்திகள், வாட்ஸ்அப், மெசஞ்சர் மற்றும் தொலைபேசிக்கு ஒரு சாதாரண செய்தி மூலம் இலவச டேட்டாவைப் பெற முடியும் என கூறி பொது மக்களுக்கு அனுப்பப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.


மேலும், இவ்வாறான இணைப்புகள் ஊடாக தமது தரவுகளை வேறு தரப்பினர் பெற்றுக் கொள்வதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.


அவ்வாறான இணைப்புகளைத் தவிர்க்குமாறு பொது மக்களிடம், பணிப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
புதியது பழையவை