மட்டக்களப்பு போரதீவுப்பற்றில் இரா. சம்பந்தனுக்கு அஞ்சலிமட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று  பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கோவில் போரதீவு கிராமத்தில் தமிழ் அரசுக் கட்சியின்  போரதீவு பற்று கிளை குழு உபதலைவர் ம.கோபிநாத் அவர்களின் இல்லத்திற்கு முன்பாக தமிழ் அரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்களால் மறைந்த கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் அமரர் இரா.சம்பந்தன் ஐயாவிற்கு மலர் தூவி விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இன் நிகழ்வில் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள், தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முண்ணனி கோவில் போரதீவு உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் என பலரும் கலந்து அன்னாருக்கு அஞ்சலி செலுத்தினர்.

புதியது பழையவை