2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு விநியோகம் எதிர்வரும் செப்டெம்பர் 3ஆம் திகதி ஆரம்பமாகி 14ஆம் திகதி நிறைவடையும் என பிரதி தபால் மா அதிபர் ராஜித கே ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, செப்டம்பர் 08 ஆம் திகதி வாக்குச் சீட்டு விநியோகத்திற்கான சிறப்பு நாளாகக் குறிப்பிடப்படும் என்று அவர் கூறுகியுள்ளார்.
அன்றைய தினம் காலை 08 மணி முதல் மாலை 06 மணி வரை இது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.